தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி + "||" + Jammu and Kashmir's Apni Party members meet PM Modi in Delhi

காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி
காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக காஷ்மீர் அப்னி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் அல்டாப் புகாரி தலைமையில் 24 பேர் கொண்ட பிரதிநிதிகள்  குழு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

அப்போது காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததுடன் மாநிலத்துக்கு செய்ய வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்தும் பிரதமருடன் பேசினார்கள்.

அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியுடன் மாநில வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தில் அடிப்படை கட்டுமானங்களை அதிக அளவில் உருவாக்கி மாநிலத்தை வளர்ச்சி அடைய செய் வோம் என்று எங்களிடம் கூறினார்.

மேலும் சுற்று லாத்துறை உள்ளிட்டவற்றில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி திட்டங்கள்  செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

மத்திய அரசு மாநில மக்களுடன் அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும். மக்கள் எதிர் பார்ப்பது போல் விரைவில் காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமர் எங்களிடம் கூறினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.