தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி + "||" + our genius has gone and hiked exciseduty on fue ragulgandhi

பெட்ரோல்-டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல்-டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும் பெட்ரோல்-டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது ஏன்? என மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி கேட்டு உள்ளார்.
புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படவில்லை.


இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டது. டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 ஆக உயர்த்தப்பட்டு ரூ.4 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. கூடுதலாக சாலை வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் அதன் மூலம் கிடைக்கும் பயனை மத்திய அரசு இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி உள்ளது.

இதுதொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது :-

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களுக்கான சலுகை விலை இந்திய மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன் நான் கேட்டு இருந்தேன். ஆனால் பிரதமரோ அதற்கு நேர்மாறாக பெட்ரோல்-டீசலுக்கு கலால் வரியை உயர்த்தி அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருமானத்தை கொடுத்து உள்ளார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக அதற்கான கலால் வரியை உயர்த்தியது ஏன்?

நீங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை ஸ்திரத்தன்மையற்றதாக ஆக்குவதில் மும்முரமாக இருக்கும்போது 35 சதவீத கச்சா எண்ணெய் விலை சரிவை கவனிக்காமல் இருந்திருக்கலாம். தயவு செய்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60-க்கு குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு நன்மை செய்வதோடு, அது பொருளாதார தேக்க நிலையை உயர்த்தவும் உதவும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்கள் சந்திப்பின்போது, பெட்ரோல்-டீசல் வரி உயர்வு பற்றிய நிருபர்கள் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருந்து தவிர்க்கும் வகையில் சென்ற ஒரு வீடியோவையும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.