தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு + "||" + Local body polls in Andhra Pradesh postponed amid COVID-19 crisis

கொரோனா அச்சுறுத்தல்: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல்: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா தாக்கம் காரணமாக ஆந்திராவில் அனைத்து உள்ளாட்சி தேர்தலும் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்,

ஆந்திராவில் மண்டல் பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் 21ம் தேதியும் , நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடைபெறவிருந்தது.  

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்களை  6 வாரத்திற்கு  ஒத்திவைப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித்தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.