தேசிய செய்திகள்

தயாராகுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம்; பிரதமர் மோடி பேச்சு + "||" + Coronavirus infection; PM Modi consults with SAARC leaders

தயாராகுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம்; பிரதமர் மோடி பேச்சு

தயாராகுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம்; பிரதமர் மோடி பேச்சு
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது.
புதுடெல்லி,

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து சார்க் நாடுகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.

சார்க் நாடுகளின் (தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு) தலைவர்கள் ஒன்றிணைந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்வது எப்படி என ஆலோசனை மேற்கொள்ள முடிவானது.

இந்த நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று உரையாற்றி வருகிறார்.  பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.  சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.

இந்த சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், வைரஸ் பரவலை எதிர்கொள்ள இதுவரை இந்தியா மேற்கொண்ட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  தயாராகுங்கள்.  ஆனால் அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம் ஆகும்.

எங்களது மக்களுக்கு இடையேயான பிணைப்பு என்பது மிக பழமையானது.  எங்களுடைய சமூகங்கள் ஆழ்ந்த பிணைப்பு கொண்டவை.  ஆகையால், நாம் அனைவரும் ஒன்றாக தயாராக வேண்டும்.  ஒன்றிணைந்து செயல்பட்டு ஒன்றாக வெற்றி பெற வேண்டும் என கூறினார்.  தொடர்ந்து அவர்  பேசி வருகிறார்.