தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மாநில சுகாதாரத் துறை அமைச்சர் + "||" + 2 more COVID-19 cases in Kerala, 21 under treatment: K. K. Shailaja

கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மாநில சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மாநில சுகாதாரத் துறை அமைச்சர்
கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810க்கும் மேற்பட்டோர் நேற்று வரை பாதிக்கப்பட்டு இருந்தனர்.


இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்து உள்ளது.  67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 107 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த 107 பேருடனும் தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் மருத்துவர். இருவரும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கொச்சி மருத்துவமனையிலும், மருத்துவர் திருவனந்தபுரத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
3. சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.