உலக செய்திகள்

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன? + "||" + Corona virus test for Trump: What is the result?

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?
டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருவதால் அங்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி டிரம்பை அண்மையில் சந்தித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உடன்வந்த பாபியோ வாஜின்கார்ட்டன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இதையடுத்து, டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா? என்று பத்திரிகையாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் கொரோனா தொற்று இருப்பவருடன் டிரம்ப் நேரடி தொடர்பு வைத்திருந்த போதிலும் அவர் பரிசோதனைக்கு தயாராக இல்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தீவிர ஆலோசனைக்கு பிறகு வெள்ளை மாளிகையின் டாக்டர் ஷான் கான்லி ஜனாதிபதி டிரம்புக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொரோனா பரிசோதனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு பிறகு பரிசோதனை முடிவு குறித்த அறிக்கையை அவர் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையில் ’டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்‘ என டாக்டர் ஷான் கான்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு
டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
2. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.
3. டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? - வெள்ளை மாளிகை விளக்கம்
டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
4. டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து
டிரம்பின் பயணம், இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது என்று அமெரிக்க மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
5. ‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம்
டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே என ஆக்ரா மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.