உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா + "||" + US govt official: Coronavirus vaccine trial starts Monday

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து; பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டன்,

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 5,800-ஐ தாண்டியது.  அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 49- மாகாணங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிசோதனை குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத  அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சியாட்டில் உள்ள  கைசர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவவனம்  நிதியுதவி செய்துள்ளதாகவும் அந்த சுகாதார அதிகாரி குறிப்பிட்டார். 

ஆரோக்கியமான 45 இளைஞர்களிடம் மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது. பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ளவே முதற்கட்ட பரிசோதனை செய்யப்படுவதாகவும், ஒரு மருந்து குறித்த முழு பரிசோதனை முடிய ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின்போது பரிசோதிக்கப்படும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
2. கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு- நடிகர்-நடிகைகள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பு?
தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வற்புறுத்தி உள்ளார்.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது.