தேசிய செய்திகள்

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் + "||" + 4th batch of 53 Indians evacuated from Iran: Jaishankar

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஈரானில் இருந்து  4-வது கட்டமாக 53 இந்தியர்கள்  மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 58 இந்தியர்களும், 2-வது கட்டமாக 44 இந்திய யாத்திரிகர்களும் முறையே கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 

பின்னர் 3-வது கட்டமாக நேற்று முன் தினம் 230 இந்தியர்கள் ஈரானிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  4-வது கட்டமாக  52 இந்திய மாணவர்கள் 1 ஆசிரியர் உள்பட 53 இந்தியர்கள், ஈரானின்   தெஹ்ரான் மற்றும் ஷிராஸ் நகரிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதிகாலை 3 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்த அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.  ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.  

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உள்பட 64 நாடுகளுக்கு கூடுதல் நிதி- அமெரிக்கா
கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு கூடுதல் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.
3. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்க முடியாது சுகாதார துறை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்கவில்லை என சுகாதார துறை கூறி உள்ளது.
4. தமிழகத்தில் வீட்டிலேயே இருங்கள் இல்லை என்றால் 1 லட்சம் பேர் வரை மருத்துவமனைகளில் இருக்கக்கூடும் எச்சரிக்கை
இன்னும் 20 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் 1 லட்சம் பேர் வரை மருத்துவமனைகளில் இருக்கக்கூடும் என ஒரு பகுப்பாய்வு சுட்டிக்காட்டி உள்ளது.
5. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் - சீனா நம்பிக்கை
ஆரம்ப கட்டத்திலேயே இந்திய மக்கள் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவார்கள் என்று சீனா கூறி உள்ளது.