மாநில செய்திகள்

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை மசோதா இன்று தாக்கல்? + "||" + For those who are educated in the Tamil way   Priority in public works Bill to be filed today?

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை மசோதா இன்று தாக்கல்?

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை  மசோதா இன்று தாக்கல்?
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை சட்டப்பேரவை சீர்த்திருத்த மசோதா இன்று தாக்கலாகிறது.
சென்னை: 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு  இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து உள்ளாட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதற்கிடையே, இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கும் சீர்த்திருத்த மசோதா சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பட்டப்படிப்பு  மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்த்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் மாநிலத்தில்  உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.