தேசிய செய்திகள்

இந்தியாவின் கொரோனா வைரஸ் சோதனை விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவு + "||" + India's coronavirus testing rates are among the lowest in the world

இந்தியாவின் கொரோனா வைரஸ் சோதனை விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவு

இந்தியாவின் கொரோனா வைரஸ் சோதனை விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவு
இந்தியாவின் கொரோனா வைரஸ் சோதனை விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவானவையாக உள்ளது.
புதுடெல்லி

உலகம் முழுவதும் 162,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (சுமார் 75,000) வெற்றிகரமாக நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 2000 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் அண்டை நாடுகளில் பெரும்பாலானவை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளன. சீனாவில் இருந்து  வெகு தொலைவில் உள்ள நாடுகள் கொரோனா சோதனைகளில் அதிவேக எழுச்சியைக் காண்கின்றன. ஆரம்பகால சோதனை மற்றும் பரந்த பாதுகாப்பு ஆசிய நாடுகளை விட மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபடுகின்றன. இருப்பினும், இந்தியா மிகக் குறைந்த சோதனை விகிதங்களில் இருப்பதால் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக் சோதனை விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


ஒவ்வொரு நாட்டிலும் நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆசிய நாடுகள் (நீல கோடுகளால் குறிக்கப்படுகின்ற கொரோனா தாக்குதலை  கொண்டுள்ளன, ஐரோப்பா (மஞ்சள் கோடுகள்), அமெரிக்கா (சிவப்பு கோடுகள்) மற்றும் மேற்கு ஆசியா (பச்சை கோடுகள்) ஆகியவை கொரோனா பாதிப்புகளில்  அதிவேக உயர்வைக் காண்கின்றன.

ஹாங்காங், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில்  சோதனை விகிதங்களை குறைந்து காணப்பட்டதால்  அங்கு நோய்  பரவல் அதிக அளவில் உள்ளது.  அதேசமயம் அமெரிக்கா  மற்றும் இங்கிலாந்து அவ்வாறு செய்யவில்லை மற்றும் அதனால் அங்கு நோய் பாதிப்பு அதிவேக உயர்வைக் கண்டன. இந்தியாவும் சோதனை விகிதத்தை குறைக்கவில்லை.

இந்தியாவில், சோதனை விகிதங்கள் மிகக் குறைவானவையாக இருந்தாலும்   ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நோய் பரவுவதில் எந்தவிதமான  அதிகரிப்பையும் காட்ட வில்லை. ஆனால் இதேபோன்ற சோதனை விகிதங்களைக் கொண்ட மேற்கத்திய நாடுகளில் நோய் பாதிப்பின்  அதிவேக உயர்வு எச்சரிக்கையை  கொடுக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா; ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
இத்தாலியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. டெல்லி நிஜாமுதீன் கூட்டம்: தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல நோயை கட்டுப்படுத்துவதே அவசியம்-சுகாதாரத்துறை
டெல்லி நிஜாமுதீன் கூட்டம் தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல, கொரோனா கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. கொரோனா: தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது
கொரோனா நோயை தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
5. டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.