தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு + "||" + Maharashtra Health Department: One more person has been tested positive for #coronavirus

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மராட்டியத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

 நேற்று அவுரங்காபாத்தை சோ்ந்த 59 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ரஷியா மற்றும் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்கு அவுரங்காபாத்தில் உள்ள தூத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.98 லட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது 11 மத்திய படை வீரர்களுக்கு கொரோனா - பலி 26 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. இதில் 11 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.
5. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் - முதல்வர் பழனிசாமி
ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.