மாநில செய்திகள்

கொரோனா பீதி : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு + "||" + Corona Panic: Asked to close the task forc In the case of Government of Tamil Nadu ordered to respond

கொரோனா பீதி : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கொரோனா பீதி : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கொரோனா பரவாமல் தடுக்க சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கூறி, சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனவும் இன்று கூடுதல் மனு ஒன்றை  சூரிய பிரகாசம் தாக்கல் செய்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு; மும்பையின் பிரபல மருத்துவமனை மூடப்பட்டது
26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்ந்துள்ளது.