தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு + "||" + Kamal Nath Gets 10-Day Break Over Coronavirus, BJP Goes To Supreme Court

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. 

இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்நாத்திற்கு கவர்னர் உத்தரவிட்டார். 

ஆனால், காங்கிரஸ் எம்ல்ஏக்களை பாஜக கடத்தி வைத்திருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது என கவர்னருக்கு முதல்வர் கமல்நாத் கடிதம் எழுதியிருந்தார். 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்,  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே மத்திய பிரதேச சட்ட சபை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு: ம.பி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
2. ‘பிட்காயின்’ வர்த்தகத்துக்கு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
‘பிட்காயின்’ வர்த்தகத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.
3. சொத்துக்கள் முடக்கம்: விஜய் மல்லையா மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
4. உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு ; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
5. நிர்பயா வழக்கு ; மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.