மாநில செய்திகள்

அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை -மசோதா பேரவையில் தாக்கல் + "||" + In government functions For those who have studied Tamil Priority Filed in Bill of Assembly

அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை -மசோதா பேரவையில் தாக்கல்

அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை -மசோதா பேரவையில் தாக்கல்
10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை

தமிழக  சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் இடையே, தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முன்னதாக தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கப்பட்டது. 

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். 

அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதே போன்று 10 ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறிய பின்னர், கவர்னரின்  ஒப்புதல் பெற்று சட்டவடிவம் பெறும்.