மாநில செய்திகள்

தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியேற்ற நடவடிக்கை ரத்து + "||" + DMK MLA discharge action cancelled from the TN assembly

தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியேற்ற நடவடிக்கை ரத்து

தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியேற்ற நடவடிக்கை ரத்து
தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.வை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை துரைமுருகன் கோரிக்கையை அடுத்து ரத்து செய்யப்பட்டது.
சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று கூடியது.  இதில், மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் இடையே, தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதன்பின், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் பேசியபொழுது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கிட்டார்.  இதனால் அவை நடவடிக்கையில் குறுக்கிடும் வகையில் நடந்து கொண்ட அவரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இந்த நடவடிக்கையை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அவரது கோரிக்கையை ஏற்று தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் மீது மேற்கொண்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. தர்மபுரி மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அலைேமாதினர்.
3. குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுவை போட்ட பொதுமக்கள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் புகார் பெட்டியில் மனுவை போட்டனர்.
4. குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டும், பெட்டியில் கூட மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
5. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார்.