உலக செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு + "||" + Srilankan Government declares three day holiday

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, 


சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசியப்பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு  வரும் 19 ஆம் தேதி வரை  பொது விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். 

இலங்கையில் தற்போது வரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. மராட்டியத்தில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் - சாங்கிலியில் ஒரே நாளில் 12 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் சாங்கிலியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
4. பட்டணம்காத்தான் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
மண்டபம்ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
5. நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்
நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்.