கால்பந்து

கொரோனா வைரசுக்கு ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி + "||" + Coronavirus: Spanish football coach Francisco Garcia passes away aged 21

கொரோனா வைரசுக்கு ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

கொரோனா வைரசுக்கு ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
மாட்ரிட்,

கொரோனா வைரஸ் ஸ்பெயினில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு அந்த நாட்டை சேர்ந்த இளம் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் பலியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பில் பயிற்சியாளராக இருந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியாவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ரத்த புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனாவும் தாக்கியதால் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வைரஸ் நோய்க்கு ஸ்பெயினில் பலியான இளம் வயதுக்காரர் பிரான்சிஸ்கோ கார்சியா ஆவார். அவரது மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் ஸ்பெயினை சேர்ந்த வலென்சியா கிளப் அணியினர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு சென்று விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பி இருக்கின்றனர். இந்த அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளில் 35 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
3. இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. ஐதராபாத்: குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்
கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் உயிரிழந்த 74-வயது முதியவரின் உடல் சுகாதார பணியாளர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.