தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு + "||" + Maharashtra: A 64-year-old COVID-19 patient passes away at Mumbai's Kasturba hospital

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த முதியவர் பலியானார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை,

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


ஆனாலும் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டெல்லியை சேர்ந்த 69 வயது மூதாட்டியையும், கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவரையும் இந்த கொரோனா காவு வாங்கி இருந்தது.

மராட்டியத்தில் 39 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் உயிரிழந்தார்.

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த பிப்ரவரி 22-ந் தேதி துபாய் சென்று உள்ளார். பின்னர் அங்கு இருந்து கடந்த 5-ந் தேதி மும்பைக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பிறகு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மாகிம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கடந்த 12-ந் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. உடனே அவர் மும்பை சின்ச்போக்லி பகுதியில் உள்ள கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

உயிரிழந்த முதியவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் முதியவர் முதலில் சிகிச்சை பெற்ற இந்துஜா தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 80-க்கும் மேற்பட்டவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மராட்டியத்தில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இந்தியாவில் இந்த உயிர்கொல்லி நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை
கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.
2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.
3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
4. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.
5. அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.