தேசிய செய்திகள்

கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர் + "||" + V Muraleedharan: The lone cabinet member from Kerala

கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்

கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்
கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

புதுடெல்லி

கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே  தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

 கேரளாவின் ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SCTIMST) நோயாளிகளை கவனித்து வந்த மருத்துவர் ஒருவர்   சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்துள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவரின் உடன் பணிபுரிந்த அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெள்ளமுள்ளி  முரளிதரன் அரசுமுறை பணிக்காக இந்த மருத்துவமனைக்கு கடந்த 14-ஆம் தேதி சென்றதாக தெரிகிறது. இதன் காரணமாக முரளிதரனுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதை தொடர்ந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவக்கூடாது என்ற அடிப்படையில்  அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டார்.

கடந்த சில நாட்களாக அவர் நாடாளுமன்றம் வரவில்லை. நாடாளுமன்ற அலுவல்களில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் இருந்தே அலுவல்களை கவனித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னரே வெளியில் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சம் எதிரொலி: முக கவசம் அணிந்து எளிமையாக நடந்த திருமணங்கள்
கொரோனா அச்சம் எதிரொலியாக ராமநாதபுரத்தில் திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
2. கொரோனா அச்சம்: வாடும் மல்லிகைப்பூ; நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் அச்சத்தினால் பறிக்க ஆளில்லாமல் மல்லிகைப்பூ செடியிலேயே விடப்பட்டு உள்ளதுடன் நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக பாதிப்பும் ஏற்படுகிறது.
3. கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தினால் 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை.
4. கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு
கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினர் டோக்கியோ பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா அச்சம்: கைகுலுக்க வேண்டாம்; ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் - இஸ்ரேல் பிரதமர் அறிவுரை
கொரோனா அச்சம் காரணமாக, கைகுலுக்க வேண்டாம், ‘நமஸ்தே’ சொல்லுங்கள் போதும் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.