மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை + "||" + Prohibition of visiting prisoners in Tamil Nadu

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள் மூடப்பட்டன.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.
2. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
3. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.