மாநில செய்திகள்

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி + "||" + Because of the corona There is no need to adjourn the Convention Chief Minister Palanisamy

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி
கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன்.  கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.  அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்க  நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை.போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நான் உள்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன்; முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதே மகிழ்ச்சி - முதல்வர் பழனிசாமி
நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் பழனிசாமி கூறினார்.
2. கொரோனா அச்சுறுத்தல்: சட்டசபையில் முதல்-அமைச்சர், துரைமுருகன் ருசிகர விவாதம்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த அச்சமும் தேவை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் தனபால்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் கூறினார்.
4. பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, தவறாக பரப்பக்கூடாது- ஓ.பன்னீர் செல்வம்
பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை தவறாக பரப்பக்கூடாது என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
5. கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.