தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை + "||" + Raise corona awareness; PM Modi advises BJP MPs in meeting

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஒவ்வொருவரும் தொகுதிக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 155க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 6,500ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 107 ஆக அதிகரித்து இருந்தது.  இந்த எண்ணிக்கை நேற்று 114 ஆகவும், இன்று 125 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புதுடெல்லியில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், சில உறுப்பினர்கள் முன்கூட்டியே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்கும்படி வலியுறுத்தினர்.

இதுபற்றி சில உறுப்பினர்கள் கடிதம் வழியே தகவல் தெரிவித்து உள்ளனர்.  இதற்கு தமது வருத்தத்தினை பிரதமர் தெரிவித்து உள்ளார்.  பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஏப்ரல் 3ந்தேதி வரை நடைபெறும் என கூறினார்.

இந்த கூட்டத்தில், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார்.  இதேபோன்று கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஊடகங்களின் பணியையும் அவர் பாராட்டி உள்ளார்.  இதனை நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்: ‘பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’
‘யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்றும், ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுறுத்தி உள்ளார்.
3. சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் கலெக்டர் அறிவுரை
பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கூறினார்.
4. மாறி வரும் சூழலில் விழிப்புணர்வு அவசியம் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை
மாறி வரும் சூழலில் விழிப்புணர்வு அவசியம் என்று மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.
5. விதை பரிசோதனை முடிவுகளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் அதிகாரி அறிவுரை
விதை பரிசோதனை முடிவுகளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என விதை சான்று இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.