உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தனிமைபடுத்துதல் சீனாவில் விவாகரத்து விகிதம் அதிகரிப்பு + "||" + Divorce rates up in China, claims official; blames it on Covid-19 quarantine

கொரோனா வைரஸ் தனிமைபடுத்துதல் சீனாவில் விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தனிமைபடுத்துதல் சீனாவில் விவாகரத்து விகிதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தனிமைபடுத்துதலால் சீனாவில் விவாகரத்து விகிதம் அதிகரித்து உள்ளது.
பெய்ஜிங்

சீனாவின் உகான் நகரில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டாலும் அங்கு வேறு விதமான சிக்கல் உருவாகி உள்ளது.

தம்பதியினர் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுய  தனிமைப்படுத்தப்படுவதால் நாட்டில் விவாகரத்து விகிதம் உயர்ந்துள்ளது என்று சீன திருமண பதிவுத்துறை அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவாகரத்து விகிதம் முன்பை விட அதிகமாக உயர்ந்துள்ளது என  தென்மேற்கு சீனாவின் தாஜோவில் உள்ள திருமண பதிவுத்துறை மேலாளர் லு ஷிஜூன் கூறி உள்ளார்.

பிப்ரவரி 24 முதல் விவாகரத்து பெற 300 க்கும் மேற்பட்ட ஜோடிகள் பதிவு செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்
மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் நோக்கம் என்ன? டொனால்டு டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா
அறிகுறியே இல்லாமல் கொரோனா நோய் திடீர் என தோன்றி டாக்டர்களை கொரோனா வைரஸ் குழப்பி வருகிறது.
4. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு புதியதிட்டங்கள்- முதல்வர் பழனிசாமி
உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து உள்ளார்.
5. பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை
பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது.