தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் முதல் பலி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Coronavirus update: Karnataka doctor who treated India’s 1st patient to die of Covid-19 tests positive

கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் முதல் பலி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு:  இந்தியாவில் முதல் பலி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு

கர்நாடக மாநிலம் கலபுரகி(மாவட்டம்) டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கலபுரகிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து கடந்த 5-ந் தேதி அவர் கலபுரகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.  கலபுரகி முதியவர் கொரோனா வைரசால் மரணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவிலேயே முதலாவதாக கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு இந்தியாவின் முதல் பலியாக அவர் இருந்தார்.

தற்போது முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தி  வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனிமை வார்டுக்கு அனுப்பப்படுவார் ”என்று கல்பூர்கியின் துணை ஆணையர் ஷரத் பி கூறி உள்ளார்.

 சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு  இன்று வெளியிட்டு உள்ள டுவிட்டில் 

கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு மேலும்  2 அதிகரித்து உள்ளது.  மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. . இங்கிலாந்தில் இருந்து வந்த 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது. கலபுரகி இறந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு  கொரோனா தொற்று உள்ளது. இருவரும்  தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் ”என்று கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை
கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.
3. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.
4. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
5. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.