மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னை தி.நகரில் பெரிய கடைகளை மூட உத்தரவு + "||" + Corona virus echo; Orders to close large stores in Chennai

கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னை தி.நகரில் பெரிய கடைகளை மூட உத்தரவு

கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னை தி.நகரில் பெரிய கடைகளை மூட உத்தரவு
கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னை தியாகராயநகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.  திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.  மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை விதிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் அனைத்து வகையான பொருட்களையும் வாங்க கூடிய அளவுக்கு நிறைய கடைகள் அமைந்துள்ளன.  இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வழக்கம்போல் திரளாக குவிந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராயநகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூடும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோன்று சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் என்றும் வங்கி ஏ.டி.எம்.களை அடிக்கடி தூய்மைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆணையர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் எதிரொலி; தர்பூசணி, முலாம் பழம் விலை சரிவு - வியாபாரிகள் கவலை
கொரோனா வைரஸ் எதிரொலியால் தர்பூசணி, முலாம் பழம் விலை சரிவடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
2. கொரோனா வைரஸ் எதிரொலி: கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் எதிரொலியாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்களும் கைகளை சுத்தம் செய்த பிறகே மனுக்கள் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
3. கொரோனா வைரஸ் எதிரொலி: ஊட்டியில் திரையரங்குகள் மூடல்; சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊட்டியில் திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
4. கொரோனா வைரஸ் எதிரொலி; மராட்டிய நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா வைரஸ் எதிரொலி: கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது - பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.