உலக செய்திகள்

"சீன வைரஸ்" என கூறிய அதிபர் டிரம்ப் : சீனா கண்டனம் + "||" + Chinese officials condemned Trump's comments, saying his his tweet smeared China

"சீன வைரஸ்" என கூறிய அதிபர் டிரம்ப் : சீனா கண்டனம்

"சீன வைரஸ்" என கூறிய அதிபர் டிரம்ப் : சீனா கண்டனம்
"சீன வைரஸ்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளது.இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங், 

கொரோனாவின் ஊற்றுக்கண்  சீனாவின் உகான்  என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் (Zhao Lijian,) கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.

இதை அடுத்து  வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ (Bill de Blasio) இது அமெரிக்கர்களுக்கும் அங்குள்ள ஆசியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என கூறியுள்ளார். 

இதற்கு சீனாவும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்வதாக கூறியுள்ளது.  இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில்,

அமெரிக்கா முதலில் தனது சொந்த விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.