உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு + "||" + ran: Death toll from coronavirus climbs to 988

கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
ஈரானில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 135 பேர் உயிரிழந்தனர்.
டெஹ்ரான், 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவி உள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 1,52,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம் 19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

இந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர். மேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் 60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.