மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு + "||" + Hybrid cows will produce 25 liters of milk per day; CM announcement

ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு

ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு
ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபையில், கால்நடை துறை மானிய கோரிக்கை விவாதம் இன்று நடந்தது.  இதில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன், சின்னசேலத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருக்கும்பொழுது, கால்நடை பூங்காவை சேலம் மாவட்டத்தில் அமைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், இது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது என சாடினார்.  இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல் அமைச்சர், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்கவும், கலப்பின பசுக்களை உருவாக்கவும் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது.  ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என கூறினார்.

பின்னர் அவர், கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்கி, மருத்துவ கல்லூரியும் கொடுத்து திருப்தி இல்லை என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேவை இல்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறினால் ஓராண்டு சிறை முதல்-அமைச்சர் அறிவிப்பு
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது. ஊரடங்கை மீறுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
2. தமிழகத்தில் தடை காலத்தில் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு
தமிழகத்தில் தடை காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
3. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. நாளை முதல் 31-ந்தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். தேவையில்லாமல் பொதுமக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.