தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு + "||" + Corona virus threat: indefinite postponement of West Bengal legislature

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கொல்கத்தா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மேற்கு வங்காள சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டமான தொற்று வியாதி தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, கொரோனா அறிகுறி உள்ள எவரையும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்க அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.


சினிமா தியேட்டர்கள், கலையரங்குகள், மிருகக்காட்சி சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட ரூ.200 கோடி சிறப்பு நிதியத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ்: 21 ஆயிரம் நிவாரண முகாம்களில் 6½ லட்சம் பேர் தங்க வைப்பு
நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நிவாரண முகாம்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கிய மம்தா; எளிமையான அணுகுமுறையால் மக்களை கவருகிறார்
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ள மம்தா பானர்ஜி, மக்களை கவர்ந்து வருகிறார்.
3. தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
5. ஐதராபாத்: குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்
கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் உயிரிழந்த 74-வயது முதியவரின் உடல் சுகாதார பணியாளர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.