தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள்: மத்திய அரசு நடவடிக்கை + "||" + 15 feature restrictions nationwide: central government action

நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள்: மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள்: மத்திய அரசு நடவடிக்கை
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-

* நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும்.


* கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம்.

* தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.

* பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்தலாம்.

* திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். புதிய நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

* ஓட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். அங்கு கைகழுவுவதற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

* உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும்.

* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது.

* மக்கள் தேவையின்றி பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து வணிக வளாகங்களிலும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடு செய்வது நல்லது.

* வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சந்தைகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

* அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படி பழக வேண்டும்? என்பதை மருத்துவமனைக்கு வருபவர்களிடம் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.

* ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுலுக்குவதை தவிர்க்கவும். பாசத்துடன் கைபிடிப்பதையும், கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனம் தேவை. எங்கிருந்து, என்ன பொருட்கள் வாங்குகிறோம்? என்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.

* கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது நமது கடமையாகும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 167 ஆண்டுகால வரலாற்றில் நாடு முழுவதும் 3-வது முறையாக ரெயில் சேவை நிறுத்தம்
கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இது 167 ஆண்டுகால வரலாற்றில் 3-வது முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. நாடு முழுவதும் இன்று ‘மக்கள் ஊரடங்கு’ ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
3. நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பொதுத்துறை ஊழியர்கள் ஆதரவு
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் 8-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்துக்கு பொதுத்துறை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
4. நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழு நியமனம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை
நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழுவினை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
5. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.