தேசிய செய்திகள்

மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை + "||" + "Will Be Forced To Stop Mumbai Trains If...": Uddhav Thackeray

மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மக்கள் அவசியம் இன்றி பயணங்களை தொடர்ந்தால் மும்பையில் மின்சார ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
மும்பை,

மராட்டியத்தில் நேற்று முன்தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அமெரிக்காவில் இருந்து வந்த மும்பையை சேர்ந்த 49 வயது நபருக்கும், 14-ந் தேதி அமெரிக்காவில் இருந்து வந்த புனேயை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது. முன்னதாக நேற்று காலை மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 வயது முதியவர் உயிரிழந்தார். இதனால் மற்ற 40 கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவசரமாக மந்திரி சபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அடுத்து வருகிற 15 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புனேயில் உரிமையாளர்கள் அவர்களாகவே கடைகளை மூடி உள்ளனா். அதுபோல மற்ற இடங்களிலும் மளிகை கடை போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்றவைகள் மூடப்பட்டால் நன்றாக இருக்கும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள கடினமான சூழலை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

மும்பையில் அத்தியாவசிய தேவைகளான மின்சார ரெயில், பஸ் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க தவறினால், மின்சார ரெயில், பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய கடினமான நிலைக்கு அரசு தள்ளப்படும்.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் சில நாட்கள் மூடப்படும். 7 நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் நிர்வாக பணிகளில் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது: ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும்
21 நாள் ஊரடங்கின்போது பஸ், ரெயில்கள் ஓடாது என்றும், ஆஸ்பத்திரி, மளிகை, காய்கறி கடைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது - கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. பிரேசிலில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 11 பேர் பலி
பிரேசிலில் பஸ்-லாரி நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
4. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்-மராட்டிய அரசு அதிரடி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இடைவெளி விட்டு பயணம் செய்யும் வகையில் பஸ், ரெயில்களில் இருக்கைகள் பாதியாக குறைக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
5. கோவையில் கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: பஸ், ரெயில், விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது
கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது.