தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + Soldier Tests Positive For Coronavirus, First Case In Army

இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்தியாவில்  இதுவரை 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ராணுவ வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

34- வயதான அந்த வீரர் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சுகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் ஈரானிலிருந்து பிப்ரவரி 20-ம்தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினார். பிப்ரவரி 29-ம் தேதி முதல் லடாக்கில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

பிப்ரவரி 25-ம் தேதி விடுப்பில் சென்ற ராணுவ வீரர், சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தார். மார்ச் 2-ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மார்ச் 7-ம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மார்ச் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.என்.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். 

அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்கானது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்காக உயர்ந்தது.
3. இந்தியாவில் ‘கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருக்கிறது’ - பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர், 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் - அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.