மாநில செய்திகள்

போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு + "||" + Southern Railway announces cancellation of 11 trains due to insufficient reservation

போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை , 

சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்-ரெயில் நிலையங்கள், பூங்காக்கள், கோவில்கள் போன்றவற்றில் பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.