மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + At the Rajiv Gandhi Government Hospital The first Corona test will begin tomorrow Minister Vijayabaskar

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும்  - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் 
 அமெரிக்காவில் கொரோனா  நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர்  கொடிய நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை 

மருந்து கண்டுபிடிப்பது ஆராய்ச்சி நிலை குறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை தொடங்கும். கொரோனா அறிகுறிகள்,பாதிப்புகள் இருப்பவர்கள் மட்டுமே அதற்கான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமில்லை.

தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறித்து  மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால் பரிசோதனை செய்ய அரசே கட்டணைத்தை நிர்ணயம் செய்யும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா; ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
இத்தாலியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. டெல்லி நிஜாமுதீன் கூட்டம்: தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல நோயை கட்டுப்படுத்துவதே அவசியம்-சுகாதாரத்துறை
டெல்லி நிஜாமுதீன் கூட்டம் தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல, கொரோனா கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. கொரோனா: தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது
கொரோனா நோயை தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
5. டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.