மாநில செய்திகள்

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் + "||" + Because chicken eats meat Coronavirus is not infected Minister Udumalai Radhakrishnan

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் கொரோனா வைரஸ் கோழி மூலம் பரவுவதாக தவறான தகவல்கள் பரவி வருவதால் நாமக்கல்லில் முட்டை ஒன்று 1.50 பைசாவாகவும், கோழி ஒரு கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்றும் இருப்பினும் யாரும் வாங்க முன்வருவதில்லை எனவும் இதனால் பண்ணையாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது. கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதில்லை என்ற விழிப்புணர்வு தொடர்ச்சியாக சுகாதாரத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், கோழி மூலம் நோய் பரவுவதில்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை’ என்றார்.

மேலும், கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.