உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்வு + "||" + Italy's coronavirus death toll surges past 2,500 - Live updates

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்வு

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்வு
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக உயர்ந்துள்ளது.
ரோம்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 345 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை  2,158 லிருந்து 2,503 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,980லிருந்து 31,506 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ககன்யான் திட்டம்: இந்திய வீரர்கள் 25% பயிற்சியை நிறைவு;கொரோனாவால் பயிற்சி நிறுத்தம்
ககன்யான் திட்டம்: இந்திய வீரர்கள் 4 பேரும் 25% பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர் என ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. கொரோனா அதிகமாக இருக்கும் நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனை நடத்த வேண்டும் -டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்து உள்ளார்.
3. உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
4. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளனர்.