தேசிய செய்திகள்

கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் + "||" + Simple steps to prevent corona spread Ministry of Health

கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்
கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் , இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வெளிநாட்டவர் மற்றும் 122 இந்தியர்கள் கொரோனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் , இதுவரை இந்தியாவில் 3 உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகளை பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

அசைவ உணவுகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினியை மட்டுமே பயன்படுத்தி கை கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும், சாதாரண சோப்பை கொண்டு கை கழுவினாலே, கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்றும், அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.