தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் + "||" + 276 Coronavirus-Infected Indian Citizens Abroad, Says MEA

வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, வெளிநாடுகளில் எத்தனை இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்விகள் கேட்கப்பட்டன.


அவற்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளதரன் எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஈரானில் 255 இந்தியர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேருக்கும், இத்தாலியில் 5 பேருக்கும், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் 8 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈரானை பொறுத்தவரை, 6 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் லடாக், காஷ்மீர், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த யாத்ரீகர்கள் 1,100 பேரும், காஷ்மீரை சேர்ந்த 300 மாணவர்களும், கேரளா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரம் மீனவர்களும் அடங்குவர். மற்றவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலமாக வசித்து வருபவர்கள்.

அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஈரான் அரசுடன் இந்திய தூதரகங்கள் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை அளித்து வருகின்றன. கடந்த 16-ந் தேதி நிலவரப்படி, அவர்களில் 205 யாத்ரீகர்களும், 183 மாணவர்களும் உள்பட 389 இந்தியர்கள், ஈரானில் இருந்து 4 பிரிவுகளாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக, 6 சுகாதார அதிகாரிகள், ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,706 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் பகுப்பாய்வு கூடம் உள்ளிட்ட இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

ஈரானில் தென்மாகாணங்களில் இந்திய மீனவர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களை இந்திய தூதரகம் அணுகி உள்ளது. அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களை பரிசோதனைக்கு பிறகு இந்தியா அழைத்துவர எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு வி.முரளதரன் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் 100 கோடிபேர் நோயுற்றிருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
2. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது
கொரோனா வைரஸசால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது என்பதை பார்க்கலாம்.
3. கொரோனா தடுப்பு: பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் நிவாரண நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது?
சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஆண்களை விரும்பி தாக்குகிறது என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
கொரோனா தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் சாதனை