தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: சோதனையை இந்தியா வெல்லும் - ப.சிதம்பரம் நம்பிக்கை + "||" + India will win the test P. Chidambaram Confidence

கொரோனா வைரஸ் பாதிப்பு: சோதனையை இந்தியா வெல்லும் - ப.சிதம்பரம் நம்பிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு:  சோதனையை இந்தியா வெல்லும் - ப.சிதம்பரம் நம்பிக்கை
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையை இந்தியா வெல்லும் என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. இதனை  மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையை இந்தியா வெல்லும் என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்,

மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மக்கள், கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்றும்,  

பயணங்களைத் தவிர்த்து விடுங்கள் என்றும். தேவையில்லாத சந்திப்புகளைத் தவிர்க்கவும்,  தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் 
ப. சிதம்பரம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.