மாநில செய்திகள்

கொரொனா பீதி: சந்திக்க வருவதை தவிர்க்குமாறு தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை + "||" + Corona Panic: Avoid coming to meet Notice board in front of Tamil Nadu Minister's house

கொரொனா பீதி: சந்திக்க வருவதை தவிர்க்குமாறு தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை

கொரொனா பீதி: சந்திக்க வருவதை தவிர்க்குமாறு  தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை
கொரொனா பாதிப்பால் சந்திக்க வருவதை தவிர்க்குமாறு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில்  இதுவரை  150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக மராட்டிய  மாநிலத்தில் 41 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

பரவலாக எல்லா மாநிலத்திலும் கொரோன தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் மார்ச் 31ந்தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.  

தமிழக அரசும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததுடன் கோயில் திருவிழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடைவித்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வீட்டின் முன் கொரோனா பாதிப்பை யொட்டி சத்திக்க வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு பலகை வைக்கபட்டு உள்ளது 

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வீடு உள்ளது.

அதன்  வாசலில் முக்கிய அறிவிப்பு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மார்ச் 31ந்தேதி வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை கோபிசெட்டிபாளைத்திலும் சென்னையிலும் சந்திக்க வருவதை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அமைச்சர்களில் செங்கோட்டையன் முதல்முறையாக தன்னை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு பலகை வைத்து மற்ற அமைச்சர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். இதனால் அமைச்சரை சந்திக்க வருபவர்கள் தோட்டத்து வீட்டின் முகப்பு வாயில் கேட்டுடனே திரும்பிச்செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுப்பது பற்றி ஆலோசிக்க பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
4. கொரோனா வைரஸ் தாக்கி மரண படுக்கையில் ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ‘டி.ஜே.’ டேனி சர்மா - உருக்கமான தகவல்கள்
கொரோனா தாக்கி மரண படுக்கையில் இருந்த போது டி.ஜே. டேனி சர்மா, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகள் தெரிய வந்துள்ளன.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமையில் பிரார்த்தனை நடத்திய போப் ஆண்டவர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில், வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று தனிமையில் பிரார்த்தனை நடத்தினார்.