உலக செய்திகள்

கடன் வசூலிப்பதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு உத்தரவு + "||" + President orders banks to suspend loan recoveries from businesses for 6 months

கடன் வசூலிப்பதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு உத்தரவு

கடன் வசூலிப்பதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு உத்தரவு
கொரோனா வைரஸ் தாக்கத்தால், கடன் வசூலிப்பதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதிலும்அதன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளில் அதன் கோரத்தாண்டவத்தை காட்ட துவங்கி உள்ளது.  இலங்கையில் கொரானா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 60ஐ எட்டியுள்ளது.

இலங்கையில்  கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசியப்பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு  வரும் 19 ஆம் தேதி வரை  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தால் இலங்கையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில்,  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்டுள்ள உத்தரவில்,

ஆறு மாதங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டிப் பணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளார். 

மேலும், தொழில் துவங்க யாரேனும் விண்ணப்பித்தால் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும், பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.