மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona damage to a person from Chennai

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.