உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? - டிரம்ப் டிவிட்டர் பதிவால் எதிர்பார்ப்பு + "||" + Trump's Office of Personnel Management head quits unexpectedly

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? - டிரம்ப் டிவிட்டர் பதிவால் எதிர்பார்ப்பு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? - டிரம்ப் டிவிட்டர் பதிவால் எதிர்பார்ப்பு
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டிவிட்டர் பதிவால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
வாஷிங்டன்

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 165-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8228 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் பாதிப்பு 1 லட்சத்து 98 ஆயிரத்து 412 ஆக உயர்ந்தது.  இவர்களில், 82 ஆயிரத்து 813 பேர் குணமடைந்து விட்டதாகவும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில்  இதுவரை  150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தெற்காசியாவில் பாகிஸ்தானில் - 247 பேரும், இலங்கையில் - 43 பேரும், ஆப்கானிஸ்தானில் - 22 பேரும், மாலத்தீவுகளில் - 13 பேரும், வங்காள தேசத்தில் - 10 பேரும்  நேபாளம், பூட்டானில் தலா ஒரு நபரும் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா பரவியுள்ளது. அந்த நாட்டின் நியூயார்க், வாஷிங்டன் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. பலி எண்ணிக்கை 100-யை கடந்து 116 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.

உலக முழுவதும்  கோர முகத்தை காட்டும் கொரோனா வைரசுக்கு எதிராக  தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில்  யார் முதலில் மருந்து கண்டுபிடிப்பது என்ற போட்டி ஜெர்மனி-அமெரிக்காவிடையே  நிலவி வருகிறது.

ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் தாங்கள் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது பல்வேறு நாட்டினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் டுவீட்  செய்து உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடித்து வந்தாலும்  அமெரிக்கா முன்னிலையில்  உள்ளது. ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை
கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.
3. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.
4. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
5. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.