தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சம்; ரெயில் டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் 60 % அளவுக்கு ரத்து + "||" + Coronavirus outbreak: Over 60% train tickets cancelled, says Indian Railways

கொரோனா வைரஸ் அச்சம்; ரெயில் டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் 60 % அளவுக்கு ரத்து

கொரோனா வைரஸ் அச்சம்; ரெயில் டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் 60 % அளவுக்கு ரத்து
கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக மார்ச் மாதத்தில் 60 % ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னை,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்து உள்ளது.  3 பேர் பலியாகி உள்ளனர்.  13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட) மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.  இந்த வருடம் மார்ச் மாதத்தில் 60 சதவீதம் அளவுக்கு ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என நாடாளுமன்ற குழுவுக்கு இன்று ரெயில்வே அதிகாரிகள் தகவல் அளித்து உள்ளனர்.

இதேபோன்று கொரோனா வைரஸ் ஆபத்து தடுப்பு நடவடிக்கையாக பயணிகள் அல்லாதோர் எண்ணிக்கையை குறைக்க வருகிற மார்ச் 31ந்தேதி வரை, டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளை ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக தெற்கு ரெயில்வே உயர்த்தி உள்ளது.

தெற்கு ரெயில்வே இன்று பல்வேறு ரெயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை செல்லும் மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் வரை செல்லும் சூப்பர் ஏ.சி. எக்ஸ்பிரஸ், மட்காவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 26 ரெயில்கள் வருகிற 23ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் சூழ்ந்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராகமல் இருந்ததற்காக, ரெயில்வே வாரிய தலைவருக்கு நாடாளுமன்ற குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. தர்மபுரி மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அலைேமாதினர்.
3. குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுவை போட்ட பொதுமக்கள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் புகார் பெட்டியில் மனுவை போட்டனர்.
4. குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டும், பெட்டியில் கூட மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
5. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார்.