மாநில செய்திகள்

பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி + "||" + We are actively monitoring passengers from other states VijayaBaskar

பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் - 126, வெளிநாட்டினர் - 25, குணமடைந்தோர் - 14, உயிரிழப்பு - 3 

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநிலத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார்.  மராட்டியம், கேரளாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும், பதற்றம் வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாவிடில் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.