தேசிய செய்திகள்

கொரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் - தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் + "||" + No doubt coronavirus will have an impact on economy: CEA K Subramanian

கொரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் - தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

கொரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் - தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
கொரோனாவால் இந்தியப்பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்பிரமணியன்  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-

கொரோனாவின் தாக்கத்தால் அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்து போயுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்றத் தன்மையே நிலவுகிறது.  எப்போதெல்லாம் நிச்சயமற்றத் தன்மை நிலவுகிறதோ அப்போதெல்லாம் பங்குச் சந்தைகளில் பதற்றமான சூழல் உருவாகும். இதன் விளைவாக பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இது ஏப்ரல் வரை நீடிக்கும்.

மக்கள் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதை மக்கள் நிறுத்திவிட்டனர். இவை முடிவுக்கு வந்த பிறகே இதன் தாக்கத்தை குறித்து மதிப்பிட முடியும். கொரோனா வைரஸால் நிச்சயமற்றத் தன்மை நிலவி வருவதால், பங்குச் சந்தைகளிலும் நிச்சயமற்றத் தன்மையே நிலவும். சர்வதேச முதலீட்டாளர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனைத்து முதலீடுகளையும் ஒரே இடத்தில் குவிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் இது வரை எந்த மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என மத்திய நிதித் துறை இணை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் இதைத் தெரிவித்த அவர், கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும். எனினும் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகத்துறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயுமாறு ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் மற்றும் வர்த்தக சங்கங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும் சீன இறக்குமதியை நம்பியுள்ள மருந்து தயாரிப்பு, மின்னணுப் பொருள்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.