தேசிய செய்திகள்

பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு + "||" + There will be no one-month agitation on behalf of BJP - JP Natta Announcement

பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு

பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு
பிரதமர் மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது என்று ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பா.ஜனதா எம்.பி.க்கள் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பா.ஜனதா சார்பில் ஒரு மாதத்துக்கு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெறாது என தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பா.ஜனதாவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒரு மாதத்துக்கு பா.ஜனதா சார்பில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றி பா.ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவில் சிவகார்த்திகேயன்?
பா.ஜனதாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கத்திற்கு தடை
வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது.
3. நாடாளுமன்ற விசாரணை வேண்டும்: பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’? - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்டுப்பாட்டில் வாட்ஸ் அப் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறித்தி உள்ளது.
4. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
5. துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜனதாவில் புதிய பதவிகள்
திமுகவில் இருந்து பா. ஜனதாவுக்கு மாறிய துரைசாமி மற்றும் நமீதா உள்பட 10 பேருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.