மாநில செய்திகள்

‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Cleanup employees will be called puriyt staffs- Edappadi Palanisamy Announced in Assembly

‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பழுதடைந்துள்ள சாலைகள், நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

சென்னையில் சிறுதொழில் முனைவோர் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி விளக்கும் பாலமாக “புதுமுறைக் காணல் மையம்” ஏற்படுத்தப்படும். இம்மையம், சீர்மிகு நகர நிறுவனத்தின் கீழ் செயல்படும். மாநிலத்தில் பசுமைச் சூழலை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பயன்பாடின்றி உள்ள திறந்தவெளி நிலங்களில், “மியாவாக்கி” முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கப்படும்.

15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதுதவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியை செய்து வருகிறார்கள். பொது இடங்களில் தூய்மையை பேணிக்காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவர்களது நலனைப் பேணுவதில் அக்கறை கொண்டு, இப்பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல், அவர்தம் குடும்பத்தினருக்கென குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்துதல், அவர்களது குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் கருதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் மற்றும் திறன் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி “தூய்மைப் பணியாளர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.

ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அதனை செயல்படுத்தும் விதத்தில், 2020-2021-ம் ஆண்டைய நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக் குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட் அல்லது பேவர் பிளாக் சாலை வசதி, தெரு விளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில் கால்நடைகளை பாதுகாத்திட, 2020-2021-ம் நிதியாண்டில், 9 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 6 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் ரூ.258.60 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

30 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

2019-2020-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 301 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020-2021-ம் ஆண்டு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020-2021-ம் நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன்பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 “முதியோர் சுய உதவிக் குழுக்கள்” ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, “ஆதார நிதி” ஆக குழு ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.18 கோடியே 79 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி நெல்லை வருகை; கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி நெல்லை வருகிறார். அப்போது அவர், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
2. காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்
காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார்.
3. தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
4. தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் தினக்கூலி ரூ.600 வழங்க வலியுறுத்தல்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு
பொன்முடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.