உலக செய்திகள்

கொரோனா பீதியில் உலகம்: வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..! + "||" + North Korea fires 2 short-range ballistic missiles into East Sea from North Pyongan Province: Yonhap News Agency

கொரோனா பீதியில் உலகம்: வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!

கொரோனா பீதியில் உலகம்:  வழக்கம் போல்  ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!
உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், இது எதையும் கண்டுகொள்ளாமல் ஏவுகணைகள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.
பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. 

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. 

இதனால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார். இதனால் இருநாட்டுத் தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

கொரோனா பீதியைக் கண்டுகொள்ளாத வடகொரியா

தற்போது உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த  சில தினங்களுக்கு முன்  குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், சிறிய ரக ஏவுகணைகள் சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் 2 சிறிய ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக  கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்
அறை எண் 39 வழியாக உலகின் ஆனைத்து வசதிகளையும் கிம் ஜாங் உன் அனுபவிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
2. வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது -வீடியோ வெளியீடு
வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
3. வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் - சீனா கவலை
வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் கவலை தெரிவித்துள்ளார்.
4. கிம் ஜாங் உன் நிலை என்ன? வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் போட்டி ஆரம்பம்?
கிம் ஜாங் உன் நிலை என்ன என்பது குறித்து வெளி உலகிற்கு தெரியாத நிலையில்,வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி ஆரம்பமாகி உள்ளது.
5. வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த தகவல்...? சீனா டாக்டர்கள் குழுவை அனுப்புகிறது
வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த தகவலை அறிந்து கொள்ள சீனா டாக்டர்கள் குழுவை வடகொரியாவுக்கு அனுப்புகிறது.