உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு + "||" + Coronavirus influx in Pakistan rises to 720

பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்,

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. ஈரானுக்கு புனித யாத்திரை சென்று வந்த பலருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்து விட்டது. இதில் 267 பேர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.


கராச்சியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இதனால் வைரஸ் பாதிப்புக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் மக்கள் அனைவரும் தாங்களே 45 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் சிகிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான வரிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு தற்போது 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
2. பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு பலி
பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.
3. பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
4. பாகிஸ்தானில் பயங்கரம்: 100 பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கியது
பாகிஸ்தானில் 100 பேருடன் பறந்த விமானம் விபத்துக்குள்ளானது. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
5. பாகிஸ்தான் விமான விபத்தில் 99 பயணிகள் உள்பட 107 பேர் பலி
கராச்சி விமான நிலையத்தில் இறங்க முயன்ற பாகிஸ்தான் விமானம் விபத்தில் சிக்கி 99 பயணிகள் உள்பட 107 பேர் பலியானார்கள்.